விஜயின் அப்பாவை சந்தித்தார் புஸ்ஸி ஆனந்த்

 
புஸ்ஸி

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை அகில இந்திய தளபதி விஜய் ரசிகர் மன்ற பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.

Image

நடிகரும் இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திடீர் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அந்த நேரங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வாய்ஸ் நோட்-ஆக பேசி மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வு பெற்று வந்த அவர், சமீபத்தில் வீடு திரும்பினார். 

இந்த நிலையில்  நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை அகில இந்திய தளபதி விஜய் ரசிகர் மன்ற பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது விஜய் மக்கள் மன்ற செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து அவரிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டறிந்ததாக தெரிகிறது.

Image
அகில இந்திய தளபதி விஜய் ரசிகர் மன்ற பொது செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்ட பின்னர் தான் நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பிரச்சனை எழுந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த நிலை மாறி, சகஜமாக நடிகர் விஜயும், தனது அப்பாவை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த்தும்  எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.