‘விஜய் நூலகம்’ திட்டத்தை புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார்!

 
pussy anand

தாம்பரம் பல்லாவரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவங்கி வைத்தார். 

Image

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'விஜய் விலையில்லா மருந்தகம்', 'விஜய் விழியகம்', 'விஜய் பயிலரங்கம்' உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.  அந்த வகையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் 'தளபதி விஜய் நூலகம்' திட்டத்தினை இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் துவங்கி வைத்தனர். செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாம்பரத்தில் துவங்கி வைத்தார். அதன் பின் பல்லாவரத்திலும் துவங்கி வைத்தார். 

தாம்பரத்தில் 300 புத்தகங்கள், பல்லாவரத்தில் 200 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது, அரசியல் தலைவர்கள், பெரியார், காமராஜர், அம்பேத்கர், அன்னை தெரசா, அப்துல்கலாம், நேதாஜி பற்றிய புத்தகங்கள், போட்டித்தேர்வு, சட்டம், அகராதி, சிறுகதைகள், பாரதியார் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன, தினமும் காலை 9 மணி முதல் 4 மணி வரை திறந்திருக்கும். நூலகத்தில் தலைவர்கள் எழுதிய வாசங்கள் எழுதப்பட்டு ஒட்டியுள்ளனர் அந்த வகையில் விஜய் எழுதிய "யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க. உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கோங்க." என ஒட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் நலத்திட்ட உதவிகள் செய்து வருவதால் ரசிகர்களிடையே அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது. 

Image

இத்திட்டம் அரியலூர் மாவட்டத்தில் 3500 புத்தகங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 900 புத்தகங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களில் தலா 325 புத்தகங்களும் சென்னை கிழக்கு வடசென்னை கிழக்கு, வட சென்னை வடக்கு வேலூர் மாவட்டம் என 11 இடங்களில் திறக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக வருகிற 23ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இடத்திலும், கோவையில் நான்கு இடத்திலும், ஈரோட்டில் மூன்று இடத்திலும், தென்காசியில் இரண்டு இடத்திலும், சேலம், புதுக்கோட்டை, கரூர். சிவகங்கை, திண்டுக்கல்,  கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் 21 இடங்களில் நூலகம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் புத்தகங்களை நூலகத்தில் இருந்து உறுப்பினராகி எடுத்து செல்லாம் அதற்கு கட்டணமில்லை என தெரிவித்தார். செய்தித்தாள்களும் வைக்கப்படும் தேவைக்கேற்ப புத்தகங்கள் அதிகரிக்கப்படும் என்றார். 

பல்லாவரத்தில் நூலகம் வருவதற்கு முன்பு காரில் வந்த புஸ்ஸி ஆனந்த் இறங்கி இருசக்கர வாகனத்தில் சென்றார் அப்போது தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.