வணிகர் நலன் காக்கப்பட வேண்டும் - வணிகர் தின வாழ்த்து கூறிய ஜி.கே.வாசன்

 
gk vasan

வணிகர் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் வணிகர் நலன் காக்கப்பட வேண்டும் என்று ஜி.கே.வாசன்  வலியுறுத்தியுள்ளார்.

gk

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்  தனது சமூகவலைத்தள பக்கத்தில், "ஒவ்வொரு வருடமும் மே 5 ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் வணிகர்களும், அவர்களின் தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும். வணிகர்கள் பொது மக்களின் வாழ்க்கையில் இணைந்து செயல்படுபவர்கள். அதாவது கடை வைத்திருந்து, தொழில் செய்து, வியாபாரம் செய்து மக்களிடம் தொடர்பில் இருப்பவர்கள் வணிகர்கள். வணிகர்கள் மூலம் பொது மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை அனைவரும் அறிவோம்.

gk

அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர்களும் பொது மக்களின் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டு, உதவிடும் வகையில் தொழிலில் ஈடுபட வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் வணிகர்களுக்கு என்றும் துணை நிற்கும். மத்திய மாநில அரசுகள் வணிகர்களின் தொழில், வியாபாரம் பெருக, வணிகத்தினால் பொது மக்களும் பயன்பெற திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வணிகர்களின் தொழில் முன்னேற, வியாபாரம் சிறக்க, வாழ்க்கைத்தரம் மேம்பட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வணிகர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.