"வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்" - அமைச்சர் சிவசங்கர்

 
Sivasankar

வட சென்னை மக்களின் வசதிக்காக மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்.

tn

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் ,  "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.  கோயம்பேட்டில் இயக்கப்பட்ட தென் மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. 

minister sivasankar
வடசென்னை மக்களின் சிரமத்தை தவிர்க்க மாதவரத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயங்கும். 80% பேருந்துகள் கிளாம்பாக்கத்திலும், 20% பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயங்கும். மாதவரத்தில் இருந்து திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்து இயக்கப்படும். வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாதவரத்தில் இருந்து, பல்வேறு வழித்தடங்களில் 160 பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.