வாணியம்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 4 பேர் பலி

 
விபத்து

வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் அரசு விரைவுப் பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

Image

பெங்களூரிலிருந்து வந்த அரசு பேருந்தும், எதிரே வந்த தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதில்  3 ஆண்களும் 1 பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் நேரில் ஆய்வு செய்தார்.

அதே சமயம் வாணியம்பாடி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வெளியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த கிருத்திகா (35), வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்த முகமது பைரோஸ் (45), சித்தூரை சேர்ந்த அஜீத் (25), மற்றும் SETC அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயரிழந்தனர்.