பேருந்துகளில் நெரிசல் நேரங்களில் சுமைகளை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை!!

 
bus accident

பேருந்துகளில் நெரிசல் நேரங்களில் சுமைகளை  ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் அனுப்பிய சுற்றறிக்கையில் , " மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு பயணி 5 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம். ஆனால் 5 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும் சுமைகளுக்கு ஒரு பயணிக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.

bus

20 கிலோ வரை ரூ.10 அல்லது ஒரு பயணிக்கான கட்டணத்தில் எது அதிகமோ அதனை வசூலிக்க வேண்டும். 20 கிலோவுக்கு மேல் இரண்டு பயணிகளுக்கான கட்டணம் அல்லது ரூ.20 எது அதிகமோ அதனை வசூலிக்க வேண்டும்.

bu

அதிக பயணிகள் பயணம் செய்யும் நெரிசல் நேரங்களில் சுமைகளை பேருந்தில் ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை" என்று மாநகர போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.