நிற்காமல் சென்ற பேருந்து - ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்

 
tn

நெல்லை அருகே நிற்காமல் சென்று அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் விரட்டி சென்று ஏறும் சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  நெல்லை மாவட்டம் ஸ்ரீபுரத்தில் பள்ளி முடிந்து மாணவர்கள் காத்திருந்த நிலையில் அந்த வழியாக வந்த முக்கூடல் நோக்கி சென்ற அரசு பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது.  

bus

இதை கண்ட மாணவர்கள் உடனடியாக முண்டியடித்து ஓடும் பேருந்தில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர்.  வாகனங்கள் அதிகம் வரக்கூடிய சாலையில் பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்து பின்னர் ஓடிய சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர். 

suspend

இந்நிலையில் திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து பேருந்தில் ஓடிச் சென்று  மாணவர்கள் ஏறியுள்ளனர். ஓட்டுநர் முருகன் மற்றும் நடத்துநர் முத்துப்பாண்டியை பணியிடைநீக்கம் செய்து அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.