தேனியில் விபரீதம்! சாலையில் குபுகுபுவென எரிந்த பேருந்து
Nov 8, 2026, 17:18 IST1794138517512
தேனி பெரியகுளம் அருகே பள்ளி மாணவர்கள் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து விபத்துகக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி தேவதானப்பட்டி அருகே, கொடைக்கானல் சுற்றுலாவை முடித்துவிட்டு திரும்பும் பொழுது கேரள பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. சாமர்த்தியமாக பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடனடியாக கீழே இறக்கினார். சுமார் அரை மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ஏசி சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் ஊர் திரும்ப மாற்றுப் பேருந்து ஏற்பாடும் செய்யப்பட்டது.பெரிய குளம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

