#BUDGET2026 சென்னை- பெங்களூர்- ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் சேவை
Feb 1, 2026, 11:35 IST1769925906997
அரசு மூலதன செலவுகள் 2014ல் ரூ.2 லட்சம் கோடியில் ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 3 முக்கிய கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்
- சரக்கு போக்குவரத்துக்கு பிரத்யேக ரயில் பாதை அமைக்கப்படும்.
- பால்குனி- சூரத் இடையே சரக்கு போக்குவரத்துக்கு பிரத்யேக ரயில் பாதை
- உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை 2047-க்குள் 12% ஆக உயர்த்த திட்டம்
- இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் பிரத்யேக ரயில் பாதை
- உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை 6லிருந்து 12% ஆக 2047க்குள் உயர்த்த திட்டம்
- பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழித்தடங்கள் அமைக்கப்படும்.
- பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க 200 பூங்காக்கள் அமைக்கப்படும்.
- சென்னையில் பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும்.
- சென்னை- பெங்களூரு- சென்னை இடையே அதிவேக ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
- முக்கிய நகரங்களில் தலா ரூ.5,000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.
- வங்கித்துறையை சீர்த்திருத்தி அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்


