#BUDGET2026 எலக்ட்ரானிக்ஸ் துறையை ஊக்குவிக்க ரூ.40, 000 கோடி ஒதுக்கீடு
நாடாளுமன்றத்தில் இந்தியாவின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2026 - 27 பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு வேலைவாய்ப்பு, நுகர் திறன், வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதை குறிப்பிட்டு உரையாற்றினார். அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், “புனிதமான தைப்பூச நாளிலும் ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் நாட்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறி வருகிறது. வேலைவாய்ப்பு, உற்பத்தி பெருக்கும் வகையிலும் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் நாட்டின் வளங்களை பெறுவது அரசின் லட்சியங்களில் ஒன்று.இதுவரை 350 சீர்த்திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தால் உற்பத்தி துறையில் பெரும் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உயர்த்து அரசின் இலக்கு. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் பொருளாதாரம் வலுவான நிலைத்தன்மை, நிதி ஒழுக்கம், நிலையான வளர்ச்சி மற்றும் மிதமான பணவீக்கம் ஆகியவற்றுடன் சீராக முன்னேறி வருகிறது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்
- அரியவகை கனிமங்கள் உற்பத்திக்கு என வழித்தட திட்டம்
- புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.
- உயிரி மருத்துவத்தை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
- எலக்ட்ரானிக்ஸ் துறையை ஊக்குவிக்க ரூ.40, 000 கோடி ஒதுக்கீடு
- கண்டெய்னர் உற்பத்திக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
- தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசாவில் அரிய வகை தாதுக்களுக்கான வழித்தடம் அமைக்கப்படும்
- மாநிலங்களுடன் இணைந்து 3 பிரத்யேக கெமிக்கல் பூங்காக்கள் உருவாக்கப்படும்
- செமி கண்டக்டர் உற்பத்திக்கு 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்
- விளையாட்டு சாதனங்கள் உற்பத்தி செய்ய பிரத்யேகத் திட்டம்
- சிறு, குறுத் தொழில்்துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
- பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க 200 பூங்காக்கள் அமைக்கப்படும்
- குறு நிறுவனங்களை ஆதரிக்க ரூ.2,000 கோடி நிதியுடன் திட்டம்

