பட்ஜெட் எதிரொலி : தொடர்ந்து சரியும் தங்கம் விலை... 3 நாட்களில் ரூ.3,040 குறைவு..

 
தங்கம் விலை


தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. அதன்படி தங்கம் சவரனுக்கு ரூ480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்திற்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15%ல் இருந்து 6% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல்  பிளாட்டினம் மீதான சுங்கவரி 15.4%ல் இருந்து 6.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.  இதன் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்து வருகிறது.  நேற்று முன்தினம்( பட்ஜெட் நாள்)  காலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து  ஒரு சவரன் தங்கம்  ரூ.54,480க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் ஒரு கிராம்  ரூ.6,810க்கு விற்கப்பட்டு வந்தது. 

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.44,000-ஐ தாண்டியது..

அதனைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட பின்னர், நண்பகலுக்குப் பிறகு அதிரடியாக  தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்தது. அதேபோல் கிராமுக்கு ரூ.260 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,550க்கும், ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்கப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் அதிரடியாக ரூ.3.10 குறைந்தது. அதன்படி  ஒரு கிராம் ரூ.92.50க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்று தங்கம் விலை  சவரனுக்கு ₹480 குறைந்து ஒரு சவரன் ₹51,920-க்கும்,  கிராமுக்கு  60 ரூபாய் குறைந்து 22 கேரட் ஆபரணத் தங்கம்  ஒரு கிராம் ₹6,490-க்கு விற்பனையானது.  இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து,  ஒரு கிராம் ரூ.92க்கு விற்கப்பட்டது.   

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

இந்நிலையில் பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து 3வது இறங்கு முகத்தில் இருந்து வருகிறது.  அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.51,440க்கு விற்கப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது. 

இதேபோல் வெள்ளி விலையில் தொடர்ந்து சரிந்து வருகிறது. சென்னையில் இன்றும் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து , சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ.89க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு கிலோ பார் வெள்ளி 89,000க்கு விற்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருவது நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.