அண்ணே., நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் - ஓபிஎஸ்சை திருத்திய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

 
1

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் தொகுதி சார்ந்து கேள்வி எழுப்பிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை - தேனி செல்லும் சாலையில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் பதில் என்ன? என்று கேட்பதற்கு பதிலாக, போக்குவரத்து துறை அமைச்சரின் பதில் என்ன? என்று ஆதவ் அர்ஜுனாவிடம் கேட்டார். உடனே எழுந்து பதிலளித்த அமைச்சர் ஆதவ், “அண்ணே நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்” எனக் கூறியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது..