இட்லி கடைக்காரர் வீட்டில் அதிநவீன பிஸ்டல் துப்பாக்கி! அதிர்ச்சியில் போலீஸ்
சீர்காழி இட்லி கடைக்காரர் போர்வையில் இருந்த உலோக சிலைகள், பிஸ்டல், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கணவன் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மூன்று பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் நான்கு உலோக சிலைகள், கத்தி, குளோரோஃபார்ம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரித்த போது சீர்காழி அறியா பிள்ளை குளத்து மேட்டு தெருவை சேர்ந்த சுரேஷ்(45), அவர் மனைவி ரோஷினி(35,) விழுந்திட சமுத்திரம் அப்துல் ஹாதி.(25). என்பதும் சுரேஷ் அவரது மனைவி இருவரும் சேர்ந்து அறியா பிள்ளை குளக்கரையில் தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்திருப்பதும், காலை மாலை இட்லி வியாபாரம் போக மீதமுள்ள நேரத்தில் சீர்காழி வாய்க்காங்கரை தெருவில் வாடகை வீடு எடுத்து குறி சொல்லும் தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
காவி உடை அணிந்து சாமியார் போல உலா வந்து சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் வீட்டில் இருந்த 9 எம்எம் பிஸ்டல் துப்பாக்கி, 6 தோட்டாக்கள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்து சிலைகள் எங்கிருந்து வந்தன?, துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி. சினேக பிரியா மூவரிடம் நேரில் விசாரணை நடத்தினார். இட்லி கடைக்காரர் வீட்டில் அதிநவீன பிஸ்டல் துப்பாக்கி இருந்த சம்பவம் சீர்காழி பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

