தண்டவாளம் உடைந்தது - விரைவு ரயில் நின்றதால் விபத்து தவிர்ப்பு

 
Train

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டது. விரைவு ரயில் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக திருச்செந்தூர் வரை பயணிகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று  18.01.24 பாலக்காட்டில் இருந்து வருகை தந்த ரயில்  ஒட்டன்சத்திரத்திற்கு  வருகை தந்தது. பின்னர் அங்கிருந்து கிளம்பி காமாட்சிபுரம்  வழியாக திண்டுக்கல்லை நோக்கி  வந்து கொண்டிருந்தது. காமாட்சி புரத்தை கடந்த பொழுது  தண்டவாளத்தில் வித்தியாசமான  சத்தம் கேட்டுள்ளது. 

ரயில் சம்பவ இடத்தை கடந்த பின்பு இன்ஜின் டிரைவர் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் பணியின் காரணமாக விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டிருந்தனர். இதனையடுத்து தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை தற்காலிகமாக ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். ரயில் இன்ஜின் டிரைவரின் துரித நடவடிக்கையின் காரணமாக பெரும் விபத்து  தவிர்க்கப்பட்டது.