நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படும் பிராட்வே பேருந்து நிலையம் - மாதிரி புகைப்படங்கள் இதோ!!

 
tm tm

பிராட்வே பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான மாதிரி புகைப்படம் வெளியாகியுள்ளது.

tn

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்த பிராட்வே பேருந்து நிலையம் கடந்த 2002 ஆம் ஆண்டு வரை தென் மாவட்டங்களில் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.  பின்னர் போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடுக்கு தென் மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன.  இதனால் பிராட்வேயில் இருந்து வெறும் மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. 

tn

பழமையான இந்த பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை வைத்த நிலையில் ரூபாய் 823 கோடியில் நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையத்தை மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.  பிராட்வேயில் மல்டி மாடல் இண்டர்க்ரேசன் என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.  தற்காலிகமாக பேருந்து நிலையம் அமைக்கும் பணியினை சென்னை மாநகராட்சி சார்பில் 5 கோடி செலவில் செய்யப்பட்ட வருகிறது.  அதன் பிறகு பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கப்படும் . ஒன்பது மாடி கொண்ட வணிக வளாகத்துடன் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.   இந்த சூழலில் நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ள சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் நான்கு மாடல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.