பதவியேற்ற 12 நாட்களில் தவெகவினர் அட்டகாசம்... ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாக புகார்
வேலூர் அருகே செங்கல் சூலையில் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் கிராமத்தில் செங்கல் சூளை நடத்துபவர்கள் சண்முகம், தினகரன், சுனில் குமார் ,ரமேஷ், சுமன் இவர்கள் ஐந்து பேரும் புதூர் கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கணியம்பாடி தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் இவர்கள் மூணு பேரும் நாங்கள்தான் ஆளுங்கட்சி இனிமேல் கணியம்பாடி பகுதிகளில் செங்கல் சூளை நடத்த வேண்டும் என்றால் எங்களுக்கு மாமுல் ஒரு லட்சம் கட்ட வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். கட்சி மாவட்ட செயலாளர் சொல்லி தான் வந்துள்ளதாகவும் மாமு தரவில்லை என்றால் தொழில் நடத்த முடியாது என்றும் மிரட்டி உள்ளனர். மேலும் செங்கல் சூளை நடத்துபவர்களை தகாத வார்த்தையில் அர்ச்சனை செய்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தில் உள்ள மூத்த நிர்வாகிகள் இதுபோன்ற விஷயங்களை தட்டிக் கேட்கவில்லை என்றால் எல்லா மாவட்டத்திலும் நடைபெற்றால் இது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.
— Suresh Elangovan (@sureshelangov12) May 22, 2026
மற்ற ஆட்சியில் இதுபோல விஷயங்கள் நடந்ததால்தான் மக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை விரும்பி வாக்களித்தார்கள்.… pic.twitter.com/eWc8fuTPgA
இந்த மிரட்டல் வீடியோ பொதுமக்களிடையே வைரல் ஆகி வருகிறது. உயிருக்கு பயந்து அச்சத்தில் உறைந்து போன செங்கல் சூளை உரிமையாளர்கள் இது குறித்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

