திருச்செந்தூர் முருகன் கோயிலில் மீண்டும் தலைதூக்கிய லஞ்சம்! கண்டுகொள்வாரா அமைச்சர் ரமேஷ்?

 
s

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாழிக்கிணறு தண்ணீர் ஒரு பாட்டில் 50 ரூபாய் லஞ்சம் வசூல் செய்யப்பட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Image


முருகனின் இரண்டாம் படை வீடான திருசெந்தூர் முருகன் கோயிலில் சமீபத்தில் அமைச்சர் ரமேஷ் பக்தர் போல முகமூடி அணிந்து தரிசனத்துக்கு வந்த அவரிடமே 4000 ரூபாய் தரிசனத்திற்கு  பணம் கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் தொடர்பு உள்ளது. ஆனால் ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இது விஸ்வரூபம் எடுத்த நிலையில் தொடர்ந்து கோயிலின் இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையரை பணியிட மாற்றம் செய்து அறநிலையத் துறைச் செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அடங்குவதற்குள் முருகன் கோயிலில் நாழி கிணறு தண்ணீர் 1 லி வாட்டர் கேனில் நிரப்பி கொடுக்க 50 ரூபாய் செக்யூரிட்டி வசூல் செய்கிறார். இங்கு குளிப்பதற்கு இலவசம் என்ற நிலையில் பணம் வசூல் செய்வது தொடர்பாக இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்த பிறகும் கடந்த மூன்று நாட்கள் தொடர்ச்சியாக செக்யூரிட்டி பணம் வசூல் செய்து வருகிறார். இதன் பின்னணியில் பலருக்கு தொடர்பு இருப்பதால் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்