#BREAKING தி.மலை கோயில் பணிக்கு லஞ்சம்- திமுக ஆட்சியில் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்த அமைச்சர்

 
ச்

திருவண்ணாமலை கோவிலில் அரசு வேலைக்கு கடந்த ஆட்சியாளர்கள்  லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து தேர்வு செய்த பட்டியலை ரத்து செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பெயரில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

ரமேஷ்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் திமுக ஆட்சியில் 109 பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அதில் கலந்துகொண்டவர்களிடம் அரசு வேலைக்கு லஞ்சம் பெற்று தேர்வு செய்ததாக பொது மக்கள் புகார்களை அடுத்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் ரமேஷ், உத்தரவின் பெயரில் அந்த தேர்வானது ரத்து செய்யப்பட்டு மீண்டும் நேர்மையாக நேர்காணல் நடத்தி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அங்கீகரிக்கப்பட்ட 466 பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த பணியாளர் பணித்தொகுதி பட்டியலில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இதர பணியிடங்கள் 39 மற்றும் காவலர் பணியிடங்கள் 70 ஆக கூடுதல் 109 பணியிடங்களுக்கு விளம்பரம் செய்து நியமனம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.