அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம்- தவெக நிர்வாகி மீது புகார்

 
அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம்- தவெக நிர்வாகி மீது புகார்

அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக தேனி தெற்கு மாவட்டச் தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்ற தேனி தெற்கு மாவட்டச் தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி ரூ.20 லட்சம் பெற்றதாக சமூக வலைதளங்களில் புகார் பரவியது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தமபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் வித்யாசாகர், தேனி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.