தாய்ப்பால் விற்பனை - மாநிலம் முழுவதும் கண்காணிக்க 18 குழுக்கள் அமைப்பு

 
tt

 சென்னை மாதவரத்தில், சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்த முத்தையா என்பவரது கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், 50க்கும் மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்ய உரிமம் பெற்று, சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வருவது சோதனையில் அம்பலமாகியுள்ளது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

tn

இந்நிலையில் சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதவரம் பகுதியில் 50 மில்லி லிட்டர் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ₹500-க்கு விற்று வந்த கடைக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். புரோட்டீன் பவுடர் விற்பதற்காக உரிமம் பெற்றுவிட்டு தாய்ப்பால் விற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.