#BREAKING : மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு..!!
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சாமானிய, கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது.
எதிர்பார்த்தபடி இது மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க தொடங்கியது. இப்படி இருக்கையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. புதியதாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. வழக்கமாக புதிய அரசு பொறுப்பேற்கிறது எனில், பழைய அரசின் நலத்திட்டங்கள் கைவிடப்படுவது, அல்லது புதிய பெயரில் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கைவிடப்படுமோ என்று அச்சம் எழுந்திருந்தது.
இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு விளக்கமளித்த முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே தொடரும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். நான் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2500 கொடுப்பேன் என்று விஜய் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். எனவே இந்த மாதம் அவர் சொன்னதை போல ரூ.2500 வருமா? என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திட்டத்தை சீரமைக்க விஜய் கால அவகாசம் கோரியிருக்கிறார். அப்படியெனில் இன்று பழைய தொகை ரூ.1000 வரவு வைக்கப்படுமா? என்று கேள்விகள் எழுந்தன.
இதனால் மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை இன்று (மே 15) வரவு வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.1000 காலையிலேயே வந்து சேர்ந்தது.

