#BREAKING : பலாத்காரத்தை விரும்பும் பெண்கள் : சர்ச்சை பேச்சு பேசிய விமர்சகர் டி.ஜி. மோகன்தாஸ் கைது..!

 
1

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி, அந்தப் போராட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை முன்னிறுத்தி ஜூன்.20ம் தேதி தொடங்கிய போராட்டம், பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை.25 முடிவுக்கு வந்தது.

கிட்டத்தட்ட 36 நாட்கள் நடைபெற்ற இப்போராட்டம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது. இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


இதனிடையே இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாஜக மற்றும் வலதுசாரி கொள்கைகளை ஆதரிப்பவர்கள் என பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியும், பா.ஜ.க அறிவுசார் பிரிவின் முன்னாள் தலைவருமான டி.ஜி. மோகன்தாஸ் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதிகாரம் தன் கையில் இருந்திருந்தால், அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, மூன்று முறை எச்சரிக்கை விடுத்து, அதன்பிறகும் கலைந்து செல்லாவிடில் "அவர்களை சுட்டிருப்பேன்" என்று கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் சிலர் இறப்பார்கள், சிலர் காயமடைவார்கள், நான்கு மணி நேரத்தில் நிலைமை சரியாகிவிடும், அதன் பிறகு உடல்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குறித்துப் பேசிய மற்றொரு வீடியோவில்,

போராட்டங்களில் கலந்துகொள்ளும் முற்போக்கு, மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரிப் பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள் என்றும், அங்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் அவர்கள் புகார் அளிக்க மாட்டார்கள் என்றும் மிகவும் மோசமான, இழிவான தனது கேவலமான மனநிலையை, புரிதலை வெளிப்படுத்தியிருந்தார்.

மோகன்தாஸின் இந்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் பிற அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் சைபர் போலீஸார் அவர்மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் கொச்சியில் உள்ள மட்டஞ்சேரி அருகே கூவபாடத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மோகன்தாஸ் கைது செய்யப்பட்டு, திருவனந்தபுரம் சைபர் காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டார். மேலும் இன்று பிற்பகலில் அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.