#BREAKING : தேஜஸ் விமான விபத்தில் விங் கமாண்டர் நம்னாஷ் சியால் பலி..!
Nov 21, 2025, 22:01 IST1763742699056
துபாயில் நிகழ்ந்த தேஜஸ் போர் விமான விபத்தில் உயிரிழந்தவர் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் நம்னாஷ் சியால்..
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றுள்ளன.
இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தயாரிப்பான தேஜஸ் ரக போர் விமானமும் இடம்பெற்றுள்ளது. இந்த விமானம் இன்று மதியம் 2.10 மணியளவில் வானில் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வானில் இருந்து கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.


