#BREAKING : 27 தொகுதிகளில் பாஜக உத்தேச வேட்பாளர்கள் யார், யார்?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் கடந்த முறை போட்டியிட்டு வென்ற திருநெல்வேலி தொகுதியும் பாஜகவிற்கு வழங்கப்படவில்லை. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரைத் தவிர, இந்து மதத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை கொண்ட வேறு எந்தத் தொகுதியும் கூட பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாஜக சார்பில் அறிவிக்கப்பட உள்ள வேட்பாளர்களின் உத்தேசவிவரங்கள் வெளியாகியுள்ளன.
மொடக்குறிச்சியில் கிருத்திகா சிவகுமார், திருப்பூர் தெற்கில் ஏ.பி.முருகானந்தம் போட்டியிட வாய்ப்பு.
தளி தொகுதியில் பாஜக மாநில செயலாளர் மண்டு அமர்பிரசாத் ரெட்டி போட்டியிட உள்ளதாக தகவல்
- அமர்பிரசாத் ரெட்டி - தெளி
- மொடக்குறிச்சி - கிருத்திகா சிவகுமார்
- எல். முருகன்- அவிநாசி
- ஏ.பி. முருகானந்தம் - திருப்பூர் தெற்கு
- நயினார் நாகேந்திரன்- சாத்தூர்
- கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் - திருச்செந்தூர்
- பொன் ராதாகிருஷ்ணன் - நாகர்கோவில்
- எட்வின் ஜோஸ் - பெத்மநாபபுரம்
- சிவக்குமார் - குளச்சல்
- விஜயதாரணி - விளவங்கோடு
- அஸ்வத்தாமன் - திருவண்ணாமலை
- கருப்பு முருகானந்தம் - தஞ்சாவூர்
- ராமச்சந்திரன் - புதுக்கோட்டை
- ஆனந்தன் அய்யாசாமி - வாசுதேவநல்லூர்
- ஜி.பி.எஸ். நாகேந்திரன் - ராமநாதபுரம்
- பிரேம் குமார் - ராசிபுரம்
- தமிழிசை சௌந்தரராஜன் - மயிலாப்பூர்
- அஸ்வின் - ஆவடி
- வானதி சீனிவாசன் - கோயம்புத்தூர் வடக்கு
- போஜ ராஜன் - போஜ ராஜன்
- புரட்சி கவிதாசன் - கந்தர்வகோட்டை
- சோழன் பழனிச்சாமி - திருப்பத்தூர்
- கவிதா ஸ்ரீகாந்த் - அறந்தாங்கி
- ராம சீனிவாசன் - மதுரை தெற்கு
- பாலகிருஷ்ணன் - ராதாபுரம்
- பண்ணைவயல் இளங்கோ - திருவாரூர்
- பொன் பால கணபதி - மானாமதுரை

