#BREAKING : மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை வெளியீடு..!
தமிழ்நாட்டில் தற்போதைய நிதிநிலை குறித்த புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை கடந்த ஜூன் 16-ஆம் தேதி வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து, தற்போது தனியாக மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அத்துறை அமைச்சர் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிதி நிலைமை, செலவினங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.
அதன்படி, 25.06.2026 காலை 10.30 மணி அளவில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்கட்டமைப்பு, நிதி, மனிதவளம், தளவாடப் பொருட்கள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள், வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையினை அமைச்சர் வெளியிடுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த செயல்பாடுகள், டிரான்ஸ்பார்மர் கொள்முதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என ஏற்கனவே அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக, இதர கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மே 10-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு 10 லட்சம் கோடிக்கும் மேல் கடனில் உள்ளது என குற்றம்சாட்டி, மாநிலத்தின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கை சற்று முன் அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார்.கடந்த திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே பணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.2001-2006ல் மின்வாரியத்தில் சுமார் 93ஆயிரம் பேர் பணியில் இருந்தனர்.திமுக ஆட்சியில் 9136 பேர் பணி ஓய்வு பெற்ற நிலையில் 343 பேர் மட்டுமே புதிதாக சேர்ப்பு..
மின்துறையின் கடன் இப்போது ரூ.2,47,130 கோடியாக உயர்ந்திருக்கிறது.
"2001-06 இல் வருவாய் 59,084 கோடியாகவும் செலவு 67,439 கோடியாகவும் இருந்தது. 8,355 கோடி ரூபாய் பற்றாக்குறையாக இருந்தது.
கடந்த ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டும், பற்றாக்குறை 933 கோடியாக இருந்தது. கிட்டத்தட்ட 51,000 கோடி செலவினம் அதிகரித்திருக்கிறது.
5 ஆண்டுகளில் ரூ. 34,447 கோடி மின்வாரியத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. புதிய திட்டங்கள் இல்லாமலேயே செலவு அதிகரித்திருக்கிறது" என்று நிர்மல் குமார் தெரிவித்திருக்கிறார்.
2001 இல் 6,492 கோடியாக இருந்த மின் துறையின் கடன் இப்போது 2,47,130 கோடியாக உயர்ந்திருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 87,000 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருக்கின்றனர்.
மின் துறைக்கு 1,40,635 ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், நம்மிடம் 74,714 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். 65,921 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 16,000 பேர் ஓய்வை எட்டவிருக்கின்றனர்" என்றார்.
#BREAKING | மின்துறை நிலை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கை வெளியீடு
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) June 25, 2026
WhitePaper | ElectricityDept | PowerSector | TANGEDCO | TNEB #NewsTamil24x7 #MinisterNirmalkumar pic.twitter.com/tY8kiTgYz6
null

