#BREAKING : விஜய்க்கு வந்த அடுத்த சோதனை... கடைசி நேரத்தில் வந்த சிக்கல்..

 
Q Q

கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இதற்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக தரப்பில், காவல் துறையின் அறிவுறுத்தலின்படியே நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார் என வாதாடப்பட்டது. உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பில், பரப்புரையில் ரவுடிகள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. சிபிஐ போன்ற பொதுவான ஒரு அமைப்பு விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கரூர் நெரிசல் தொடர்பாக எங்களுக்கு தெரியாமலேயே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்:

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் கரூர் நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி 21 பேர் பெயரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தங்களை ஏமாற்றி கையெழுத்து பெற்று வழக்கில் மனுதாரர்களாக இணைத்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை என மனைவியை இழந்த செல்வராஜ் மற்றும் 9 வயது மகனை இழந்த சர்மிளா  சகோதரியை இழந்த பிரபாகர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர்.

CBI விசாரணை கோரிய வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.