#BREAKING : விபத்தில் சிக்கிய விஜய் கார்..!
'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற நேஷனல் ஸ்டேடியம் புக்கிட் ஜலீலில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையம் வந்த அவரை அவரது ரசிகர்கள் ஏராளமானோர் சூழ்ந்து வரவேற்றனர். வெளியேறும் வாயிலில் இருந்து தனது காரை நோக்கி விஜய் வரும்போது, அவரது ரசிகர்கள் அவரிடம் நெருங்கி முட்டிமோதிக்கொண்டு அங்குச் சென்றனர்.
இந்நிலையில், காரின் அருகே வரும்போது கூட்டம் இன்னும் நெருங்கிவர ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில், விஜய்யும் கூட்டத்தின் நடுவே கீழே விழுந்தார்.உடனடியாக அங்கிருந்த அவரது பாதுகாவலர்கள் விஜய்யைத் தாங்கிப்பிடித்து அவரை காரில் ஏற்றி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் அங்கிருந்து புறப்பட்டபோது அவரின் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. பின்னோக்கி வந்த கார், விஜய் இருந்த காரின் முன்பக்கத்தில் மோதியது. இதில், விஜய் இருந்த காரின் இண்டிகேட்டர் பகுதி சேதமடைந்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
Vijay Car Accident | விபத்தில் சிக்கிய விஜய் கார் #tvkvijay #caraccident #vijay #thanthitv pic.twitter.com/OhTy0UbR0S
— Thanthi TV (@ThanthiTV) December 28, 2025


