#BREAKING : பயிர் கடன் ரத்து - அதிரடியாக அறிவித்தார் விஜய்..!
தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், “வேலூரில் பேசும்போது தமிழ்நாடு தான் விஜய்.. விஜய் தான் தமிழ்நாடு” என சொன்னேன். விஜய் vs ஸ்டாலின் சார் என சொன்னேன். மக்களின் உண்மையான ஒரே பிரதிநிதி என்பதால் அப்படி சொன்னேன். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாடு அணியை, டெல்லி அணியால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் சிஎஸ்கேவுக்கு எப்படி விசில் போடுவோமா, அதேபோல் தவெகவுக்கு விசில் போட போறாங்க.
தமிழ்நாட்டை காப்பாற்றுவது மு.க.ஸ்டாலின், திமுக என்பதெல்லாம் இனி ஒர்க் அவுட் ஆகாது. எனக்கும், மக்களுக்கும் நடுவில் யாராலும் நுழைய முடியாது. வீட்டுக்கு வீடு விஜய் என்பது இந்த தேர்தலில் 100 சதவிகிதம் உறுதியாகும். அடுத்த ஜென்மத்தில் நான் விவசாயி குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன். நானும் டெல்டா காரன் என யார் காதிலும் டால்டா ஊற்ற வரவில்லை” என விஜய் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கடன் வாங்கி திமுக ஆட்சி குப்புறப்படுத்து விட்டது. விவசாயிகளுக்காக ஒரு போராட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை.அவர்களை குண்டாஸ் சட்டத்தில் போட்டது திமுக. மணல் மாஃபியா குடும்பத்திற்கு திமுக அரசு தான் உறுதுணையாக இருந்து வருகிறது. ஆட்சியின் கடைசி காலத்தில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது ஏன் என கேள்வியெழுப்பிய விஜய், தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மிகப்பெரிய திட்டங்கள் உடனுக்குடன் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் தஞ்சாவூரில் இன்று சில வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். அதில், "தவெக ஆட்சிக்கு வந்ததும் உரத்தட்டுப்பாடு இருக்காது, 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்முழுமையாக ரத்து செய்யவும், 5 ஏக்கருக்கு மேல் 50% ரத்து செய்ய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். நிலமற்ற விவசாயிகள் குடும்பத்தில், குழந்தைகளின் பொறியியல், மருத்துவ செலவை அரசே ஏற்கும்.
நெல் மூட்டைகள் முறையாக பாதுகாக்கப்படும். கொள்முதல் நிலைய வசதிகள் ஏற்படுத்தப்படும்" என்றார்.

