#BREAKING : கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ‘வெற்றி 150’ திட்டம் அறிமுகம்..!
கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 'வெற்றி 150 திட்டம் அறிமுகம் செய்யப்படும்.125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்களுக்கு வேலை. மொத்தமாக 150 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ‘வெற்றி 150’ திட்டம் அறிமுகம் செய்யப்படும். 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்களுக்கு வேலை கொடுக்கப்படும். மொத்தமாக 150 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். இதற்காக ஆண்டு தோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
காயிதே மில்லத் நினைவு விருது திருவள்ளுவர் திருநாள் அன்று வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் கீழடி உள்ளிட்ட தொல்லியல் பாரம்பரிய தலங்களை பார்வையிட ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.
சுற்றுலா துறைக்கான அறிவிப்புகள்
மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றப்படும். இதற்காக மத்திய அரசிடம் ரூ. 200 கோடி மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
நதி நீர் சுற்றுலாவுக்கு ரூ. 53 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய நதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், உணவு சுற்றுலா மற்றும் கலைத்துறைக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
எக்கோ சுற்றுலா மேம்படுத்தப்படும். உள்ளூர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறைக்கு ரூ. 777 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.

