#BREAKING : வீரமணி பாலியல் வழக்கு: மேலும் ஒருவருக்கு சம்மன்..!!
‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் யாரும் தப்ப கூடாது என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, அதன் முன்னேற்றம் குறித்த தகவல்களை அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கவும் காவல்துறைக்கு முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் யாரும் தப்ப கூடாது என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி, அதன் முன்னேற்றம் குறித்த தகவல்களை அவ்வப்போது தனக்குத் தெரிவிக்கவும் காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு பூதாகரமாகியுள்ளது. அடுத்தடுத்து அந்த வழக்கில் அதிர்ச்சிகரமான அப்டேடுகள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி உட்பட 3 பேரை போலீசார் ஏற்கெனவே கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஜெம் வீரமணி மீது வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான பிரகாஷ் என்பவருக்கும் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் வழங்க பிரகாஷை போலீஸ் தேடி சென்ற நிலையில், அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் தனது பெயர் சிறுமிகள் பாலியல் வழக்கில் (எஃப்ஐஆர்) சிக்காமல் இருக்க வீரமணி, காவல் துறை உயரதிகாரிகளுக்கும் முக்கிய அரசியல் கட்சியினருக்கும் ரூ. 70 கோடி மதிப்பிலான பணத்தை செட்டில் செய்ததாக சொல்லப்படுகிறது.சென்னை ஈசிஆர், ஊட்டியில் உள்ள வீரமணிக்குச் சொந்தமான ரூ. 130 கோடி மதிப்பிலான நிலங்களை ரூ 70 கோடிக்கு விற்பனை செய்து அந்த பணத்தை பலருக்கும் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது போல் பணம் பிரித்து கொடுத்த விவகாரத்தில் சென்னையின் ரயில்வே தொழிற்சங்க பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து பிரகாஷிடம் விசாரணை நடத்த சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்தான் வீரமணியின் சொத்தை விற்று ரூ 70 கோடியை பரிமாற்றம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளதாம். எனினும் பிரகாஷ் அவரது வீட்டில் இல்லையாம். தற்போது வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

