#BREAKING : சென்னை மாநகரை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு..!

 
1

 

சென்னையில் அடுத்த 7 ஆண்டுகளுக்குள் 1 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும். மை ஹோம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.

வீடுகளில் சூரியமின் சக்தி திட்டத்தை அமைக்க ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

 சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். 

 

சென்னை மாநகரை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் மரியவில்சன். அடையாறு, கூவம் ஆறுகளை தூய்மைப்படுத்த சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்யப்படும். இதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்படும். கூவம், அடையாறில் படகு சவாரி செய்யவும், குழந்தைகள் ஆனந்தமாக விளையாடவும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.29,863 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.

2031-க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப பயிற்சி சென்னை ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விமான நிலையம் முதல் ஆவடி மற்றும் பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படும்.

ஓசூரில் இருந்து பொம்மசந்திராவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும்..

சென்னை பிராட்வேயில் ரூ. 1377 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்கப்படும். அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய இந்த பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

சூப்பர் எல்நினோ பாதிப்பை தடுக்க ரூ. 340 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.