#BREAKING : வானதி சீனிவாசனுக்கு ஐசியு-வில் சிகிச்சை.. வெளியான மருத்துவமனை அறிக்கை..!

 
vanathi--srinivas-3

பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் கோவை வடக்கு தொகுதியும் ஒன்று. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசனுக்கு கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக வானதி சீனிவாசன் களமிறப்பட்டுள்ளார்.

 

கோவை வடக்குத் தொகுதியில் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில், வானதி சீனிவாசன் கடந்த சில நாட்களாகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். கோடையின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்குக் காலில் கடுமையான வலியும் வீக்கமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாஜக நிர்வாகிகள் கோவை தெற்கு பகுதியில் உள்ள கே.எம்.சி. ஹெச் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததையடுத்து, குறைந்தது 48 மணி நேரம் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்ட நிலையில் வானதி சீனிவாசனுக்கு இரண்டு நாளாக ஐசியு-வில் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது 

இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

"வானதி சீனிவாசன் நேற்று மதியம் 2:50 மணிக்கு வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் பிற ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் படுக்கை ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது, அவர் எடுத்த மருந்துகளில் ஒன்றிற்கு லேசான அலர்ஜி எதிர்வினை ஏற்பட்டது.இதன் காரணமாக நேற்று இரவு 8 மணிக்கு கண்காணிப்புக்காக ஐசியு (ICU) பிரிவிற்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் உணர்வுடன் இருந்து, பேசக்கூடிய நிலையில் மிகவும் நலமாக உள்ளார்.

முழுமையான குணமடைய குறைந்தது மேலும் 3 முதல் 4 நாட்கள் சிகிச்சை தேவைப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.