#BREAKING : இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு பற்றி பேசினார். மேலும் இருநாடுகள் இடையே நடக்கும் வர்த்தக பேச்சுவார்த்தை, வரி விவகாரம் பற்றி விளக்கம் அளித்தார்.
இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருக்கிறது. இரு நாட்டு உறவை மேம்படுத்த அமெரிக்க தூதர் செர்ஜியோ உதவுவார்' என்று தெரிவித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளதால், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டை எடுத்து கொண்டால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கவில்லை என்று கூறி வருகிறது. ஆனால் டிரம்போ, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளது என்று கூறி வருகிறார்.
இந்நிலையில் தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட வரியை குறைப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். இது நம் நாட்டுக்கு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.


