#BREAKING : விசாரணைக்கு பிறகு உதயநிதி விடுவிக்கப்படுவார்- உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்..!

 
1

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டப் பேச்சு விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது முன்ஜாமீன் மற்றும் கைதுக்கு எதிரான அவசர மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.


உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தி முடித்தவுடன், இன்றே அவரை காவல் நிலையப் பிணையில் (Station Bail) விடுவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், எதிர்க்கட்சித் தலைவரும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து, தேவையானபோது விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்..

நீதிபதி இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இரு தரப்பு வழக்கறிஞர்களும் காரசாரமான வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.


விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "காவல் துறையின் விசாரணை நடைமுறைகளுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் முறைப்படி விடுவிக்கப்படுவார்" என்ற முக்கிய தகவலை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இதனைப் பதிவு செய்துகொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, "நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், விசாரணையை இன்றைக்குள்ளேயே விரைந்து முடித்து, இன்றே உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அரசு மற்றும் காவல் துறை தரப்பிற்கு அறிவுறுத்தினார்.