#BREAKING : “என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்” -உதயநிதி ஸ்டாலின்..!
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி அவதூறாக பேசியதாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை கோரி த.வெ.க மகளிர் அணி புகார் அளித்துள்ளார்கள். இந்நிலையில், உதயநிதி மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
இதனிடையே, உதயநிதிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தவெக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினை அவரது நீலாங்கரை இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நிலையில் உதயநிதி செய்தியாளர்களிடம் பேசியதாவது,
என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்.திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது
பேசாததை ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது
விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது
கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுகிறார்.
கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல... உதயநிதி
"இந்த நடவடிக்கையை நான் காமெடியாக பார்க்கிறேன்.." - கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்ற போது சிரித்தபடி உதயநிதி சொன்ன பதில்#DMK | #TVK | #UdhayanidhiStalin | #Police | #Arrest | #PolimerNews pic.twitter.com/Urdw9fT7nZ
— Polimer News (@polimernews) August 4, 2026

