#BREAKING: தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டம்..!
Sep 28, 2025, 18:55 IST1759065914900
கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறுவதற்கும், நிதியுதவி வழங்குவதற்கும் எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்.பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன் அடிப்படையில் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீடு வழங்குவதற்காகவும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார். விஜய் கரூர் செல்வதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் போலீசில் மனு கொடுக்க உள்ளனர்.
கரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இறந்தbசம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் இன்று காலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

