#BREAKING : உச்ச நீதிமன்றத்தை உடனடியாக நாட த.வெ.க முடிவு..!!

 
VIJAY

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளை விட, புதிதாக தேர்தலில் களம் இறங்கிய தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவிடம் 108 இடங்கள் மட்டுமே உள்ளன. அதிலும், விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், ஒரு இடத்தில் ராஜிநாமா செய்யவேண்டி இருப்பதால், தவெகவிடம் 107 இடங்கள் மட்டுமே தற்போது இருக்கின்றன. இதனால் 11 இடங்களுக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தவெக ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே 5 தொகுதிகளை தன் வசம் வைத்துள்ள காங்கிரஸ், திமுக கூட்டணியிலிருந்து விலகி, விஜய்க்கு ஆதரவு அளித்திருக்கிறது. இந்நிலையில், தவெக ஆட்சியமைக்க அனுமதி கோரி, தமிழக பொறுப்பு ஆளுநரிடம் விஜய் முறைப்படி சந்தித்து கடிதம் வழங்கினார். ஆனால் 118 தொகுதிகளுடன் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறி, இதுவரை விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இதனிடையே உச்ச நீதிமன்றத்தை உடனடியாக நாட த.வெ.க முடிவு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது... கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பை அடிப்படையாக வைத்து வாதாட த.வெ.க தரப்பில் முடிவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெகவுக்கு அழைப்பு விடுக்க உத்தரவிடக்கோரி அவரச வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாம். இதனால், மேலும் ஒரு வாரத்திற்குப் பதவியேற்பு விழா தள்ளிப்போக வாய்ப்புள்ளது.