#BREAKING : தங்கம் வாங்க இது தான் சரியான டைம்.. சவரனுக்கு ரூ.2,480 குறைந்தது ஆபரணத் தங்கம்..!!

 
Gold

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது.

இது பண்டிகை காலங்களில் நகை வாங்க நினைப்போரை சற்று ஆறுதலடைய செய்திருக்கிறது. கூடவே, அடுத்த வருடத்தில் தங்கம் விலை இன்னும் குறையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

எனினும், அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெறுதல், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தல் போன்ற காரணிகள் தங்கம் விலையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் முதலீட்டாளர்கள் தங்க நாணயத்தின் மீது முதலீடு செய்வதை தவிர்த்து, மற்ற நாணயங்களின் மீது முதலீடு செய்யலாம் என கணித்திருக்கின்றனர். இதனால் தங்கம் விலை வரும் நாட்களில் பெரும்பாலும் குறையவே வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில்bஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.2,480 குறைந்துள்ளது.நேற்று ஒரு சவரன் ரூ.1,04,320-க்கு விற்பனையான நிலையில்,இன்று ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒருகிராம் தங்கம் ரூ.310 குறைந்துரூ.12,730-க்கு விற்கப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.10,000 குறைந்து ரூ.2,00,000-க்கும் விற்பனையாகி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.