#BREAKING : கர்நாடகாவில் கொல்லப்பட்ட 3 தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் - வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்..!
மாடுகளை தேடி சென்ற தமிழர்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். மான் வேட்டைக்கு சென்றார்கள் என கூறுவது பொய் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பா.ம.க கணேஷ்குமார் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் தளி ராமச்சந்திரன் பேசுகையில், “அந்தோணி சாமி, ஜான் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 தமிழர்கள், கடந்த 14ஆம் தேதி தங்கள் கால்நடைகளை காணவில்லை என்பதற்காக அவற்றை தேடி கர்நாடக வனப்பகுதிக்கு சென்றிருக்கின்றனர். அப்போது கர்நாடக வனத்துறையினர் சுட்டதில் அந்த 3 பேரும் உயிரிழந்த நிலையில், உடன் சென்ற ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடக வனத்துறையினரின் இந்த அராஜக போக்கை இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதோடு, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு தலா ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும். தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது. ஆகவே இதற்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
விசாரணை குறித்து நிர்மல் குமார் விளக்கம் :
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதி விசாரணைக்கு கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக வனத்துறையின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் சுட்டது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்மையான, உயர்மட்ட விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளார். தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும் முதல் குரல் கொடுப்பவர் முதல்வர் விஜய் தான் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
இந்நிலையில் கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திரு. ரஞ்சித் அறிவித்துள்ளார்.
அமைச்சர் @RvRanjithtvk , திரு. @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களின் அறிவுறுத்தலின்படி, கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
— 𝓖𝓾𝓻𝓾 (@Guruprasath_02) August 18, 2026
அமைச்சர் @CTR_Nirmalkumar , நீதிபதி… pic.twitter.com/Ll7S5ygrX4

