#BREAKING : மார்ச் 16-ந் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
Updated: Feb 18, 2026, 10:48 IST1771391915094
தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுக தம்பிதுரை, தமாகா ஜிகே வாசன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது. தற்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும்.அதற்கு அதிகமாக வேட்பாளர்கள் நிற்கும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும்.
இதனையடுத்து தமிழகத்தின் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் உட்பட 10 மாநிலங்களின் 37 எம்.பி இடங்களுக்கு மார்ச் 16-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 26-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.
- வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம் பிப்ரவரி 26
- வேட்பு ம்னுத் தாக்கல் செய்ய கடைசிநாள் மார்ச் 5
- வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6
- வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 9
- போட்டி இருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் 16
- வாக்குப் பதிவு நடைபெற்றால் மார்ச் 16- ந் தேதி மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
- தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் நாள் மார்ச் 20.


