#BREAKING : தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பதவி பறிப்பு..!!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசிக்கும் ஜே.ஜே. செந்தில்நாதன் என்பவர் நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்திற்கு தலைவராக இருந்த நிலையில், விஜய் கடந்த ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.
செந்தில்நாதன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்தது.விசாரணையில், அந்தப் பெண்ணுடன் தவெக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தவெக கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்,மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடி நீக்கப்பட்டுள்ளார்.
மகளிர் அணி நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செந்தில்நாதன் நீக்கப்படுவதாக கட்சி தலைமைஅறிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் இத்தகைய செயல்கள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என தவெக நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.


