#BREAKING : சென்னையில் 25வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்: குண்டுக்கட்டாக கைது..!
‘சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறந்தநிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை.
பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படவில்லை.ஆசிரியர்களின் இந்த போராட்டம் தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தது. அதாவது, பணிக்கு வராமல் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு எச்சரித்து இருந்தது.
அசையாத அரசாங்கத்தை அசைத்து பார்த்திருக்கிறோம். வெற்றி பெறும் வரை போராட்டம் உறுதியோடு செல்லும் என்று கூறியிருந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி, இன்று கோட்டை இரயில் நிலையம் அருகே இடை நிலை ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 25-வது நாளாக அவர்களின் போராட்டம் இன்றும் நீடித்த நிலையில், போலீசார் ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
*இன்று 25 ஆம் நாளாக சென்னை கோட்டை _அருகில் "சம வேலைக்கு" "சம ஊதியம்" கோரிக்கை நிறைவேற்ற வேண்டி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் !*
— Jumabasa (@Jumabasa219201) January 19, 2026
_சம ஊதியம் வெற்றி ஒன்றே இலக்கு!_
*WE Want equal pay for equal work!* pic.twitter.com/a0Bsa6WOQQ


