#BREAKING : 32 ரன்கள் தான் இலக்கு! இந்திய அணிக்கு மரண பயம் காட்டிய ஜப்பான்... இறுதியில் 2 ரன்னில் வீழ்த்திய இந்திய அணி!
இந்தியா - ஜப்பான் நட்புறவின் 75-வது ஆண்டையொட்டி நடைபெறும் 'சுஸுகி கோப்பை' டி20 போட்டியில், இந்திய அணி 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. மைதானம் ஈரமாக இருந்ததால் 5 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியாவில் அபிஷேக் சர்மா (0), சாம்சன் (9), கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (16) ஏமாற்றினர். ஜப்பான் பந்துவீச்சாளர் சார்லி ஹின்ஸே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜப்பான் அணி வரலாற்று வெற்றி பெற 33 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்து 33 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜப்பான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா அதிர்ஷ்டவசமாக தோல்வியிலிருந்து தப்பியது.33 ரன்கள் இலக்குடன் ஆடிய ஜப்பான் அணியை, அக்சர் படேலின் துல்லிய பந்துவீச்சு (2 ஓவரில் 7 ரன்கள்) வெகுவாகக் கட்டுப்படுத்தியது. இறுதியில் ஜப்பான் 5 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்து ஓவர் டி20 போட்டியில் ஜப்பானுக்கு எதிராக இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

