#BREAKING : மதுரை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கைது!

 
Q

மதுரை விமான நிலையம் வந்தடைந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

 

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை மற்றும் அங்கு விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட போது, "நான் ஒரு பக்தையாகத் திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்கிறேன்; பக்தையாகச் செல்வது தவறா?" எனக் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

இதே விவகாரத்தில் திருப்பரங்குன்றம் நோக்கிச் செல்ல முயன்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினரால் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.