#BREAKING : தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவு..!
Aug 25, 2026, 13:31 IST1787644877479
தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 9,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நீர் திறப்பால் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத் தேவைக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

