#BREAKING : 16 வது சட்டமன்றம் கலைப்பு: தமிழக கவர்னர் அறிவிப்பு..!
May 6, 2026, 19:02 IST1778074338127
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை மே 5-ம் தேதியுடன் கலைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து மு.க. ஸ்டாலின் தனது முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆர்.வி. அர்லேகருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தார்.
மு.க. ஸ்டாலினின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்து இருந்தது.

