#BREAKING : ஜூலை 16ல் தமிழக அமைச்சரவை கூட்டம்..!!
Jul 13, 2026, 18:03 IST1783946018343
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக துறைவாரியாக நாள்தோறும் முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற ஜூலை 16 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2026 -27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

