#BREAKING : போர்வெல் – கிணறு அமைக்க மானியம்..! 1000 விவசாயிகளுக்கு மானியத்தில் பம்புசெட் வழங்கப்படும்..!
1000 விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 80 சதவீத மானியத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்திற்கு ரூ. 23 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார்.
ஆயிரம் ஏக்கர் பாசனம் பரப்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் வழங்கப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்தார். இதில் அதிகப்டச மானியம் 60 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
"வான்மகள் "திட்டம்
100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி அளித்து உரிமம் வழங்கப்படும். மேலும், வெற்றிகரமாக பயிற்சியை முடித்து உரிமம் பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார். இதற்காக ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இ-வாடகை 2.0 செயலி
இ-வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 20.31 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார்.
வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள்
திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணத்தில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் ரூ.4.6 கோடியில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார்.

