#BREAKING : ஜெம் வீரமணிக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணிக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் விசாரணைக்காக ஜெம் வீரமணியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 5 நாட்களுக்குப் பதிலாக 2 நாட்கள் மட்டும் காவல் வழங்கி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, விசாரணைக் காவல் முடிவடைந்ததும் ஜெம் வீரமணியை வரும் சனிக்கிழமையன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி பத்மா உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (SIT) தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த காவல் நீட்டிப்பு வழக்கில் கூடுதல் உண்மைகளைக் கண்டறிய உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

