#BREAKING : ஜெம் வீரமணி வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு..!!

 
Q

ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது தமிழக அரசு ஜெம் வீரமணி வழக்கை இனி SIT விசாரிக்கும்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி என்ற பெண்ணும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ஜெம் வீரமணியின் உதவியாளர் கணேசன் என இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் புகார் அளித்த போது முறையாக விசாரணை நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி எந்த தகவலையும் கண்டறிய முடியவில்லை என நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை அளித்த விசாரணை அதிகாரிகளான விபசார தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த யாஸ்மின், ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கண்ணன், அருண் ஆகியோர் மீது நடவடிக்கை பாய்ந்தது. மேலும் அருண், யாஷ்மின் ஆகியோர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த வழக்கில் மேலும் பல பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் 4 பேர் கொண்ட SIT என்கிற சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்